#Breaking: அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது உறுதி.?

Published by
பாலா கலியமூர்த்தி
  • சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் அண்ணா பல்கலைக்கழகமானது தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளை வழிநடத்தி வருகிறது.
  • இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது தொடர்பாக 5 அமைச்சர்கள் கொண்ட குழுவில் முடிவெடுக்கப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் அண்ணா பல்கலைக்கழகமானது தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளை வழிநடத்தி வருகிறது. இந்த அண்ணா பல்கலை கழகத்தை இரண்டாக பிரிக்க தமிழக அரசு ஆலோசனையில் இருந்தது. அதற்கான முயற்சியில் சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், செங்கோட்டையன், தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோர் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்காக ஆலோசனை நடத்தி வருகின்றனர் எனவும், விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது குறித்து தொடர்பாக 5 அமைச்சர்கள் கொண்ட குழுவில் முடிவெடுக்கப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், இரண்டாக பிரிப்பதால் ஏற்படும் நிதி சிக்கலை தீர்க்க குழு ஒன்று அமைக்கவும் முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து 5 பேர் கொண்ட அமைச்சரவை குழுவினர் நேற்று தலைமை செயலருடன் ஆலோசனை நடத்தினார்கள் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பஞ்சாப்பை சல்லி சல்லியாக நொறுக்கிய அபிஷேக் சர்மா! ஹைதராபாத் மிரட்டல் வெற்றி!

பஞ்சாப்பை சல்லி சல்லியாக நொறுக்கிய அபிஷேக் சர்மா! ஹைதராபாத் மிரட்டல் வெற்றி!

ஹைதராபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடி ஹைதராபாத் அணிக்கு என்ன தான் ஆச்சு என்கிற கேள்விகளை கேட்டவர்கள் அனைவர்க்கும்…

9 hours ago

பாமக தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன்! அன்புமணி ராமதாஸ் அறிக்கை!

சென்னை :  கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியீட்டு இருந்தார்.…

9 hours ago

குட் பேட் அக்லி மெகா ஹிட்! ‘KGF’ யுனிவர்ஸில் இணையும் ரெட் டிராகன் அஜித்?

சென்னை : அஜித் ரசிகர்கள் பலரும் அவரிடம் எதிர்பார்க்கும் படங்கள் என்றால் மாஸான படங்கள் என்று சொல்லலாம். அப்படி எதிர்பார்த்த ரசிகர்களுக்காகவே…

10 hours ago

அதிரி புதிரி அடி…ஷ்ரேயாஸ் சரவெடி! ஹைதராபாத்துக்கு பஞ்சாப் வைத்த பிரமாண்ட டார்கெட்!

ஹைதராபாத் : நீங்க மட்டும் தான் அதிரடியா பேட்டிங் செய்வீர்களா? என்பது போல ஹைதராபாத் அணிக்கே அதிரடி காட்டும் வகையில்…

11 hours ago

ஸ்டேட்டஸ் போட முடியல…திடீரென முடங்கிய வாட்ஸ்அப்! டென்ஷனான பயனர்கள்!

டெல்லி : உலகம் முழுவதும் உள்ள பல வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் சேவை தடைபட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக, சிலருக்கு…

11 hours ago

ரூ.27 கோடி வேலை செய்யல…ரிஷப் பண்டை கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

லக்னோ : ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்கிற சாதனையை ரிஷப் பண்ட் படைத்திருந்தார். லக்னோ அணி…

12 hours ago