#Breaking: அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது உறுதி.?

- சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் அண்ணா பல்கலைக்கழகமானது தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளை வழிநடத்தி வருகிறது.
- இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது தொடர்பாக 5 அமைச்சர்கள் கொண்ட குழுவில் முடிவெடுக்கப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் அண்ணா பல்கலைக்கழகமானது தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளை வழிநடத்தி வருகிறது. இந்த அண்ணா பல்கலை கழகத்தை இரண்டாக பிரிக்க தமிழக அரசு ஆலோசனையில் இருந்தது. அதற்கான முயற்சியில் சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், செங்கோட்டையன், தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோர் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்காக ஆலோசனை நடத்தி வருகின்றனர் எனவும், விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது குறித்து தொடர்பாக 5 அமைச்சர்கள் கொண்ட குழுவில் முடிவெடுக்கப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், இரண்டாக பிரிப்பதால் ஏற்படும் நிதி சிக்கலை தீர்க்க குழு ஒன்று அமைக்கவும் முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து 5 பேர் கொண்ட அமைச்சரவை குழுவினர் நேற்று தலைமை செயலருடன் ஆலோசனை நடத்தினார்கள் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பதில் சொல்லுங்க., இல்லைனா வேலையை விட்டு போங்க.., அரசு ஊழியர்களிடம் ‘கறார்’ காட்டும் எலான் மஸ்க்!
February 25, 2025
தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,
February 25, 2025
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025