அன்பழகனின் தந்தை ஜெயராமன் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகிலேயே 15 அடி குழி தோண்டப்பட்டடு ஜெ.அன்பழகனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சென்னை மேற்கு மாவட்ட திமுகச் செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறுநீரக பிரச்சனைக்கு சிகிக்சை பெற்று வந்தார்.
அப்போது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த ஜெ.அன்பழகன் இன்று காலை 08.05 மணிக்கு காலமானார்.
ஜெ.அன்பழகனின் மறைவுக்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், ஜெ.அன்பழகனின் உடல் நல்லடக்கம் செய்வதற்காக கண்ணம்மாபேட்டை மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. கண்ணம்மாபேட்டை மயானத்திற்கு செல்வதற்கு முன் தி.நகரில் உள்ள அவரது வீட்டிற்கு ஜெ.அன்பழகன் உடல் கொண்டு செல்லப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதையடுத்து, அன்பழகனின் தந்தை ஜெயராமன் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகிலேயே ஜேசிபி இயந்திரம் கொண்டு 15 அடி குழி தோண்டப்பட்டது. தற்போது ஜெ.அன்பழகனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…