#BREAKING: தந்தைக்கு அருகிலேயே ஜெ.அன்பழகனின் உடல் நல்லடக்கம்.!

Default Image

அன்பழகனின் தந்தை ஜெயராமன் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகிலேயே 15 அடி  குழி தோண்டப்பட்டடு ஜெ.அன்பழகனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சென்னை மேற்கு மாவட்ட திமுகச் செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வுமான  ஜெ.அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறுநீரக பிரச்சனைக்கு சிகிக்சை பெற்று வந்தார்.

அப்போது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த ஜெ.அன்பழகன் இன்று காலை 08.05 மணிக்கு காலமானார்.

ஜெ.அன்பழகனின் மறைவுக்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், ஜெ.அன்பழகனின் உடல் நல்லடக்கம் செய்வதற்காக கண்ணம்மாபேட்டை மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. கண்ணம்மாபேட்டை மயானத்திற்கு செல்வதற்கு முன் தி.நகரில் உள்ள அவரது  வீட்டிற்கு ஜெ.அன்பழகன் உடல் கொண்டு செல்லப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதையடுத்து, அன்பழகனின் தந்தை ஜெயராமன் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகிலேயே ஜேசிபி இயந்திரம் கொண்டு 15 அடி  குழி தோண்டப்பட்டது. தற்போது ஜெ.அன்பழகனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்