#Breaking:இன்று கூடுதலாக 1,450 அரசுப் பேருந்துகள் – தமிழக அரசு உத்தரவு!

Default Image

தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து,நாளை (திங்கட்கிழமை) முதல் 1 – 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதனைத்தொடர்ந்து,பள்ளி அமைவிடம்,போக்குவரத்து வசதி போன்றவற்றை கருத்தில்கொண்டு பள்ளி மேலாண்மை குழுவுடன் ஆலோசித்து முடிவெடுக்கலாம் என்றும்,எனினும்,8 பாடவேளைகள் கொண்டதாக பள்ளிகள் செயல்பட வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருக்கிறது.

இந்நிலையில்,தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு இன்று கூடுதலாக 1450 அரசுப் பேருந்துகளை இயக்க தமிழக அரசின் போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.கோடை விடுமுறைக்கு பிறகு நாளை பள்ளிகள்,கல்லூரிகள் திறக்கப்படவுள்ள நிலையில் சொந்த ஊர் செல்வதற்கு வசதியாக இத்தகைய ஏற்பாட்டை செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்