#BREAKING: தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு.!
தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து மத்திய அரசு டாஸ்மாக் இயங்க அனுமதிகொடுத்ததன் மூலம் தமிழகத்தில் 43 நாள்களுக்கு பிறகு டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அரசின் இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் டாஸ்மாக் மதுக்கடைகள் நிபந்தனையின் பேரில் இயங்க அனுமதி கொடுத்தது. ஆனால், நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் பின்பற்றப்படவில்லை என கூறி உயர்நீதிமன்றத்தில் மனு தொடரப்பட்டது. அந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மதுபான கடைகளை மூடவும், ஆன்லைன் மூலம் மட்டும் மது விற்பனை செய்யலாம் என உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதனால், சென்னையை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் சமூக இடைவெளியுடன் மதுபானங்களை விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.