BREAKING: கடைகள் 3 மணி வரை இயங்க அனுமதி.!

சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூரில் இன்று மட்டும் பிற்பகல் 3 மணிவரை கடைகள் திறந்திருக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் 1,755 பேர் பாதிக்கப்பட்டு, 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சில நகர்ப்புறங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையெடுத்து, சென்னை, கோவை, மதுரை போன்ற மாநகரில் வரும் 26 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை ஆகிய நான்கு நாட்களுக்கும், இதுபோன்று சேலம், திருப்பூர் போன்ற மாநகரில் ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை ஆகிய 3 நாட்களுக்கு முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று நேற்று முதல்வர் தெரிவித்தார்.
இந்நிலையில், நாளை முதல் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூரில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் அந்த பகுதிகளில் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பிற்பகல் 3 மணிவரை மளிகை , காய்கறி கடைகள் திறக்க முதல்வர்அனுமதி கொடுத்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.? மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது!
April 13, 2025