#BREAKING: உதயநிதிக்கு இளைஞர் நலன், விளையாட்டுத் துறை ஒதுக்கீடு!
புதிதாக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கீடு.
சேப்பாக்கம் எம்எல்ஏவும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று சற்றுமுன் அமைச்சராக பொறுப்பேற்றார். சென்னை கிண்டி ராஜ்பவனில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாட்டின் புதிய அமைச்சராக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ.
உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றதன் மூலம் தமிழ்நாடு அமைச்சர்களின் எண்ணிக்கை 35-ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் பிரத்தியேகமாக தயாராகும் இருக்கும் உதயநிதி அறையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் என பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.