#BREAKING: தேமுதிகவுடன் இன்று மாலை கூட்டணி பேச்சுவார்த்தை – ஓபிஎஸ் அதிரடி
தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடரும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் இதுவரை பாமகவிற்கு 23, பாஜகவிக்ரு 20 தொகுதிகள் சட்டப்பேரவையில் தேர்தலில் ஒதுக்கீடு செய்து, ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனிடையே, அதிமுக கூட்டணியில் மற்றொரு பிரதான கட்சியான தேமுதிகவுடன் மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தொகுதி பங்கீடு குறித்து எந்த முடிவும் இதுவரை எட்டப்படவில்லை. தொடர் இழுபறி நீடித்து வருகிறது.
தேமுதிக தரப்பில் ஆரம்பத்தில் 41 இடங்கள் கேட்டதாகவும், அதன்பிறகு சற்று குறைந்து 25 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட்டு கேட்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக தேமுதிகவுடன் இன்று மாலை பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பாமகவிற்கு இணையான தொகுதிகள் வேண்டும் என்று தேமுதிக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தேமுதிகவுக்கு 15 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட்டு வழங்க அதிமுக முன்வந்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது. எனவே, அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடிக்குமா என்ற கேள்வி எழுந்த நிலையில், தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடரும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.