#BREAKING : அனைத்து தொழிலாளர்களும் எங்கள் தொழிலாளர்கள் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published by
லீனா

வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்புபவர்கள், இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள் என முதல்வர் பேச்சு. 

திருப்பூர் ரயில் நிலையத்தில், பீகார் தொழிலாளி சஞ்சய் குமார் என்பவர் கொலை செய்யப்பட்டதாக வதந்தி பரவியதையடுத்து,  வட மாநிலத்தவர்கள் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், ஞ்சய்குமார் தண்டவாளத்தை அவர் கடக்கும் முயன்ற போது பீகார் தொழிலாளி ரயிலில் அடிபட்டு இறந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பீகார் அதிகாரிகள் தமிழகம் வருகை 

இந்த நிலையில், தொழிலாளர் நிலை பற்றி ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழு தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதாக பீகார் முதல்வர் அறிவித்து உள்ளார். இதற்கிடையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக மைச்சர் கணேசன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

முதல்வர் ஆலோசனை 

தமிழ்நாட்டில், புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்புபவர்கள், இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள்.

தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்து வேண்டுமென்றே வதந்தி பரப்புபவர்கள் மீது சட்டரீதியாக, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டின் ஒருமைப்பாட்டிற்குக் குந்தகம் விளைவிப்பவர்கள். சமூக ஊடகங்களில் இப்படிக் கீழ்த்தரமாக சிலர் அரசியல் செய்வது கடும் கண்டனத்திற்குரியது.

 தாய்த் தமிழ்நாடு என்பது மனித குலத்துக்கு மகத்தான உதவி செய்யும் கருணைத் தொட்டிலாகவே எப்போதும் இருந்துள்ளது. இனியும் அப்படித்தான் இருக்கும். இந்த விவகாரம் தொடர்பாக பீகார் முதல்வர் நிதிஷ்குமாருடன் பேசியிருக்கிறேன். அனைத்து தொழிலாளர்களும் எங்கள் தொழிலாளர்கள் தான் என உறுதி அளித்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

திருப்பதி கோயிலில் முட்டி போட்டு நேர்த்திக் கடன் செலுத்திய நிதிஷ் ரெட்டி! 

திருப்பதி கோயிலில் முட்டி போட்டு நேர்த்திக் கடன் செலுத்திய நிதிஷ் ரெட்டி!

திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…

20 seconds ago

ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை கிடைக்குமா? அமைச்சர் மூர்த்தி பதில்!

மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…

33 minutes ago

பொங்கல் ஸ்பெஷல் : தென்மாவட்ட மக்களுக்காக சிறப்பு ரயில்களை அறிவித்த ரயில்வே!

சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…

1 hour ago

கரும்பு சாறில் பொங்கல் செய்யலாமா?. அது எப்படிங்க.?

சென்னை :கரும்புச்சாறை   வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில்  காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…

2 hours ago

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பொங்கல் வாழ்த்து கூறிய அஜித்குமார்!

சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…

4 hours ago

பொங்கல் பரிசாக சற்று குறைந்தது தங்கம் விலை.! இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 அதிகரித்து விற்பனையான நிலையில், பொங்கல் பண்டிகையான…

4 hours ago