#BREAKING : அனைத்து தொழிலாளர்களும் எங்கள் தொழிலாளர்கள் – முதல்வர் மு.க.ஸ்டாலின்
வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்புபவர்கள், இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள் என முதல்வர் பேச்சு.
திருப்பூர் ரயில் நிலையத்தில், பீகார் தொழிலாளி சஞ்சய் குமார் என்பவர் கொலை செய்யப்பட்டதாக வதந்தி பரவியதையடுத்து, வட மாநிலத்தவர்கள் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், ஞ்சய்குமார் தண்டவாளத்தை அவர் கடக்கும் முயன்ற போது பீகார் தொழிலாளி ரயிலில் அடிபட்டு இறந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பீகார் அதிகாரிகள் தமிழகம் வருகை
இந்த நிலையில், தொழிலாளர் நிலை பற்றி ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழு தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதாக பீகார் முதல்வர் அறிவித்து உள்ளார். இதற்கிடையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக மைச்சர் கணேசன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
முதல்வர் ஆலோசனை
தமிழ்நாட்டில், புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்புபவர்கள், இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள்.
தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்து வேண்டுமென்றே வதந்தி பரப்புபவர்கள் மீது சட்டரீதியாக, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டின் ஒருமைப்பாட்டிற்குக் குந்தகம் விளைவிப்பவர்கள். சமூக ஊடகங்களில் இப்படிக் கீழ்த்தரமாக சிலர் அரசியல் செய்வது கடும் கண்டனத்திற்குரியது.
தாய்த் தமிழ்நாடு என்பது மனித குலத்துக்கு மகத்தான உதவி செய்யும் கருணைத் தொட்டிலாகவே எப்போதும் இருந்துள்ளது. இனியும் அப்படித்தான் இருக்கும். இந்த விவகாரம் தொடர்பாக பீகார் முதல்வர் நிதிஷ்குமாருடன் பேசியிருக்கிறேன். அனைத்து தொழிலாளர்களும் எங்கள் தொழிலாளர்கள் தான் என உறுதி அளித்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.