#Breaking:அலர்ட்…இன்று இந்த மாவட்டங்களில் மிரட்ட போகும் கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் உள்மாவட்டங்களில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி, கன்னியாக்குமரி,தென்காசி,நீலகிரி,திருப்பூர்,கோவை,சேலம்,ஈரோடு,கிருஷ்ணகிரி,தருமபுரி,திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மேலும்,நாளை முதல் நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே,தென் கிழக்கு அரபிக்கடல்,இலட்சதீவு,மாலத்தீவு,கர்நாடகா கேரளா கடலோர பகுதிகள்,தெற்கு வங்கக்கடல்,அந்தமான், மத்திய கிழக்கு வங்கக்கடல்,மன்னார் வளைகுடா,குமரிக்கடல்பகுதி,தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் வருகின்ற மே 22 ஆம் தேதி வரை மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.