#Breaking:அலர்ட்….4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் குமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி அடுத்த 24 மணி நேரத்தில் நகர்ந்து தென்கிழக்குஅரபிக்கடல் பகுதிக்கு செல்லும் என்றும்,இதனால், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே,தமிழகத்தில் தீபாவளி வரை கனமழை நீடிக்கும் என்று அறிவித்திருந்த நிலையில்,5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி,சென்னை,விழுப்புரம்,கடலூர்,வேலூர்,ராணிபேட்டை,மதுரை ,புதுக்கோட்டை,டெல்டா மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கையைப் பொறுத்தவரை குமரிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் இன்று செல்ல வேண்டாம் என்றும்,நாளையும்,நாளை மறுநாளும் லட்சத்தீவு,கேரள கடலோரம்,தென்கிழக்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025
நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
March 12, 2025
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025