#BREAKING : விஷச்சாராய மரண வழக்குகள் சிபிசிஐடி-க்கு மாற்றம் – டிஜிபி

DGP Sylendra Babu

விழுப்புரம், செங்கல்பட்டு விஷச்சாராய வழக்குகள் அனைத்தும் சிபிசிஐடிக்கு மாற்றம்

தமிழகத்தில் இதுவரை விஷச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இதுவரை 14 பேரும், செங்கல்பட்டில் 8 பெரும் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், விழுப்புரம், செங்கல்பட்டு விஷச்சாராய வழக்குகள் அனைத்தும் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்துள்ளார். முதலமைச்சர் அறிவிப்பை அடுத்து வழக்குகளை மாற்றி டி.ஜி.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ‘விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எக்கியார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விஷச்சாராயம் அருந்தி (13.05.2023 முதல் 15.05.2023 வரை) 13 நபர்கள் இறந்துபோன சம்பவம் தொடர்பாக மரக்காணம் காவல் நிலைய குற்ற எண்.225/2023 ச/பி. 120(b), 328, 304(i) IPC r/w 7, 4(1)(i)4(1)(A)(i) TNP Act 1987இன்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் 8 எதிரிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அதோடு, செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருவேறு சம்பவங்களில் பெருக்கரணை கிராமத்தைச் சேர்ந்த இரண்டு நபர்கள் மற்றும் பேரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த இரண்டு நபர்கள் விஷச்சாராயம் அருந்தி 13.05.2023 அன்று இறந்துபோன சம்பவம் தொடர்பாக சித்தாமூர் காவல் நிலைய குற்ற எண்:137/2023, ச/பி 174 Cr.P.C @ 4(1-A) TNP Act and 284,328,304(ii) IPC மற்றும் குற்ற எண்:138/2023, ச/பி 174 Cr.P.C @ 4(1-A) TNP Act and 284,328,304(ii) IPCஇன் கீழ் புலன் விசாரணையில் உள்ளன. வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 15.05.2023 அன்று விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த வழக்குகள் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு மாற்ற செய்யப்படும் என அறிவித்தார்கள்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க 16.05.2023 இவ்வழக்கை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு (CBCID) மாற்றம் செய்து தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் C. சைலேந்திர பாபு, இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

cbcid

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்