அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வென்ற கண்ணனுக்கு கார் பரிசு வழங்க உயர் நீதிமன்றம் மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
கடந்த 16-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை யொட்டி உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 12 காளைகளை அடக்கி கண்ணன் என்பவர் முதல் பரிசை தட்டிச் சென்றார். பின்னர் கண்ணன் மோசடியில் ஈடுபட்டதாக 9 காளைகளை அடக்கி இரண்டாம் பரிசு பெற்ற கருப்பண்ணன், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள்மாறாட்டம் செய்ததாக எழுந்த புகாரின் பேரில், வருவாய்த் துறையினர் நடத்திய விசாரணையில் ஈடுபட்டனர். இதனால் முதல் பரிசை யாருக்கு வழங்குவது என்பது குறித்து ஜல்லிக்கட்டு விழா குழுவினர் முடிவு செய்வார்கள் என கூறப்பட்டது. இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசு வென்ற கண்ணனுக்கு கார் பரிசு வழங்க உயர் நீதிமன்றம் மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…