#BREAKING: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் தஞ்சை தேர் விபத்து நிகழ்ந்துள்ளது என எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு.

தமிழக சட்டப்பேரவையில் தஞ்சை தேர் விபத்து குறித்து அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது. அப்போது, திருவிழா காலங்களில் போதிய பாதுகாப்பு இல்லை என குற்றச்சாட்டி அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தஞ்சாவூரில் நடைபெற்ற சம்பவம் மிகுந்த வேதனைக்குரியது. 11 விலை மதிக்க முடியாத உயிர்களை இழந்திருக்கிறோம் அத்திவரதரை 50 இலட்சம் பேர் தரிசனம் செய்தார்கள். முழுமையான பாதுகாப்பு அளித்தோம் என்றார்.

தஞ்சை மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் தேர் விபத்து நிகழ்ந்துள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். காயமடைந்தவர்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் உரிய சிகிச்சை வழங்க வேண்டும். மதுரையில் கள்ளழகர் வகையில் இறங்கும்போதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றசாட்டினார். தேர் திருவிழா நடைபெறும் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட வேண்டும். சாலைகள் சீர்செய்யப்பட வேண்டும்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பதிக்ரு நேரில் சென்று முன்னாள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் அவர்கள் ஆறுதல் சொல்ல உள்ளார் என்றும் குறிப்பிட்ட ஈபிஎஸ், அதிமுக சார்பாக இறந்த குடும்பங்களுக்கு 1 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்திருக்கிறோம். காயமடைந்தவர்களுக்கு 25,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளோம் என கூறினார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மேட்ச் ஓவர்! சென்னையில் வைத்தே சம்பவம் செய்த கொல்கத்தா…8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

மேட்ச் ஓவர்! சென்னையில் வைத்தே சம்பவம் செய்த கொல்கத்தா…8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…

6 hours ago

தோனி அவுட்டா இல்லையா? அம்பயர் முடிவால் அப்செட்டான சென்னை ரசிகர்கள்!

சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…

6 hours ago

முதல் பேட்டிங்கிலும் சொதப்பிய சென்னை…கொல்கத்தாவுக்கு வைத்த சின்ன இலக்கு!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…

7 hours ago

எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டு மக்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகம்…எம்பி கனிமொழி காட்டம்!

சென்னை :  2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…

8 hours ago

டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சு தேர்வு! சென்னையில் ருதுராஜ் பதில் யார்?

சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…

10 hours ago

பாஜக மாநிலத் தலைவர் தேர்தல் : நயினார் நாகேந்திரனுக்கு போட்டியாக ஒருவர் வேட்புமனு?

சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…

10 hours ago