#breaking: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

Default Image

தமிழக சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.

விழுப்புரத்தில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் உள்ள பல்கலைக்கழக விவகாரத்தில் தமிழக அரசு மீது குற்றச்சாட்டி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். இன்று நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மறந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் உள்ள பல்கலைக்கழகம் விவகாரத்தில் திமுக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் அன்பழகன் புகார் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த முதல்வர் மு.க ஸ்டாலின், ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் அரசு காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ளவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நினைத்தியிருந்தால் அம்மா உணவகம் அதே பெயரில் தொடர்ந்திருக்காது என தெரிவித்தார்.

ஏன் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார் என்று பதிலளித்தார். இதனைத்தொடர்ந்து, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைப்பதற்கு கண்டனம் தெரிவித்து, தமிழக சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை தொடர்ந்து செயல்பட வலியுறுத்தியும், தொடராது என அறிவித்ததால் வெளிநடப்பு செய்துள்ளோம் என தெரிவித்தார். மேலும் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் இருக்கக்கூடாது என்ற காழ்ப்புணர்ச்சியுடன் அரசு செய்லபடுகிறது என்றும் குற்றசாட்டியுள்ளார்.

மேலும், கல்வியில் புரட்சி செய்தவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள், அவரின் பெயர் இருப்பதை தாங்கிக் கொள்ள முடியாததால் அந்த பல்கலைக்கழகத்தை, அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கிறார்கள் எனவும் குறிப்பிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்