#BREAKING: அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் நியமனம் செல்லும் – உயர்நீதிமன்றம்

Published by
பாலா கலியமூர்த்தி

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீசெல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நியமனத்தை எதிர்த்த வழக்கு முடித்துவைப்பு.

அதிமுக கட்சி விதிகளின் படி, புதிய பதவிகளை உருவாக்குவதற்கு பொதுக்குழுவுக்கு அதிகாரம் கிடையாது, பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. ஆனால் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். இதன்பின் அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக சசிகலா நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் நியமிக்கப்பட்டார்கள்.

இது அதிமுகவின் விதிகளுக்கு முரணானது என்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது இருந்த விதிகளை பின்பற்ற வேண்டும் எனவும் பொதுச்செயலாளர் பதவியை ரத்து செய்துவிட்டு, ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகளை ஏற்ற தேர்தல் ஆணையம் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அதிமுக உறுப்பினர், வழக்கறிகருமான ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, உட்கட்சியில் தேர்தெடுக்கப்படும் தலைவர்கள், நிர்வாகிகள் குறித்து உள்ளே நுழைந்து ஆராய முடியாது என்றும் அவர்களின் பிரதிநிதிகள் அளிக்கும் பிராமண பத்திரத்தை ஏற்றுக்கொண்டு அனுமதி அளிப்பது, அளிக்காதது தேர்தல் ஆணையத்தின் முடிவு, இதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், அங்கீகரிக்கப்பட்ட கட்சியால் நியமிக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஓங்கிணைப்பாளரை தேர்தல் ஆணையம் ஏற்றத்தில் தவறில்லை என்று கூறி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீசெல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நியமனத்தை எதிர்த்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்துவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

KKRvsRCB : கொல்கத்தாவில் வெற்றி கொடி நாட்டிய பெங்களூர்! கிங் கோலி படைத்த மிரட்டல் சாதனை!

KKRvsRCB : கொல்கத்தாவில் வெற்றி கொடி நாட்டிய பெங்களூர்! கிங் கோலி படைத்த மிரட்டல் சாதனை!

கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான முதல் ஐபிஎல் போட்டி இன்று ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா…

3 hours ago

என்னை விட்டுட்டோம்னு பீல் பண்ணுங்க! கொல்கத்தாவுக்கு அதிரடி மூலம் பதிலடி கொடுத்த சால்ட்!

கொல்கத்தா : கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்த வீரர்களில் பில் சால்ட் ஒருவர்.…

4 hours ago

இவரை எதுக்கு 23 கோடிக்கு எடுத்தீங்க? வெங்கடேஷ் ஐயருக்கு பயத்தை காட்டிய க்ருனால் பாண்டியா!

கொல்கத்தா : கடந்த சீசன் ஐபிஎல் போட்டியில் வெங்கடேஷ் ஐயர் சிறப்பாக விளையாடிய காரணத்தால் இந்த முறை அவரை கொல்கத்தா…

5 hours ago

KKRvRCB : அடுத்தடுத்த விக்கெட்…கொல்கத்தாவை கதறவிட்ட பெங்களூர்..டார்கெட் இதுதான்

கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியும், ராயல்…

5 hours ago

மும்பையை மிஞ்சிய சென்னை! சோஷியல் மீடியாவில் யார் கெத்து? மொத்த லிஸ்ட் இதோ!

சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த அணிகளுக்கு ஆதரவு தெரிவித்து போட்டியை ரசித்து வருவார்கள். ஒரு…

6 hours ago

KKRvRCB: ஆரம்பமே அதிரடி…கைக்கு வந்த லட்டு கேட்சை விட்டு பிடித்த பெங்களூர்!

கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியும்,…

7 hours ago