பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை இந்திய தேர்தல் ஆணையத்தில் வழங்குகிறது ஈபிஎஸ் தரப்பு.
அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவுக்கான உறுதிமொழி பத்திரம் பெறும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. அதிமுகவின் இடைக்கால பொதுசெயலாளரை சுய விருப்பத்துடன் தேர்ந்தெடுத்ததாகவும், முழுமையான ஆதரவு அளிப்பதாகவும் 2,500க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களிடம் பொதுக்குழு உறுப்பினர்களிடம் affidavit (ஆதரவுக்கான உறுதிமொழி பத்திரம்) அதிமுக தலைமை அதாவது எடப்பாடி பழநிசாமி தரப்பு பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவதற்கு முன்பு, பொதுக்குழு, பொதுசெயலர் தேர்வுக்கான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவு கடிதம் பெறும் பணி நடந்துள்ளது. இந்த நிலையில், 2500க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தில் வழங்குகிறது ஈபிஎஸ் தரப்பு.
பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை ஈபிஎஸ் தரப்பில் அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் ஒப்படைக்கவுள்ளார். சுய விருப்பத்தின்படியும், முழு மனதுடன் தான் இடைக்கால பொதுச்செயலாளரை தேர்வு செய்தேன் என பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவுக் கடிதம் வழங்கியுள்ளனர். இந்த ஆதரவு கடிதம் இன்று இந்திய தேர்தல் ஆணையத்தில் வழங்கப்பட உள்ளது.
டெல்லி: உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) சிகிச்சை பலனின்றி நேற்று முன்…
சென்னை: விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும்…
நியூயார்க்: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான நோர்வே சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)…
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…
ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…
சென்னை: கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 'விஜயகாந்த்' மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம்…