#BREAKING: பொதுக்குழு உறுப்பினர்களின் “ஆதரவுக் கடிதம்”.. தேர்தல் ஆணையத்தில் வழங்கும் அதிமுக!

Default Image

பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை இந்திய தேர்தல் ஆணையத்தில் வழங்குகிறது ஈபிஎஸ் தரப்பு.

அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவுக்கான உறுதிமொழி பத்திரம் பெறும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. அதிமுகவின் இடைக்கால பொதுசெயலாளரை சுய விருப்பத்துடன் தேர்ந்தெடுத்ததாகவும், முழுமையான ஆதரவு அளிப்பதாகவும் 2,500க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களிடம் பொதுக்குழு உறுப்பினர்களிடம் affidavit (ஆதரவுக்கான உறுதிமொழி பத்திரம்) அதிமுக தலைமை அதாவது எடப்பாடி பழநிசாமி தரப்பு பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவதற்கு முன்பு, பொதுக்குழு, பொதுசெயலர் தேர்வுக்கான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவு கடிதம் பெறும் பணி நடந்துள்ளது. இந்த நிலையில், 2500க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தில் வழங்குகிறது ஈபிஎஸ் தரப்பு.

பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை ஈபிஎஸ் தரப்பில் அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் ஒப்படைக்கவுள்ளார். சுய விருப்பத்தின்படியும், முழு மனதுடன் தான் இடைக்கால பொதுச்செயலாளரை தேர்வு செய்தேன் என பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவுக் கடிதம் வழங்கியுள்ளனர். இந்த ஆதரவு கடிதம் இன்று இந்திய தேர்தல் ஆணையத்தில் வழங்கப்பட உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்