தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருப்பத்தூர், நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களுக்கு அடுத்த மாதம் 6 மற்றும் 9ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது.
மாவட்ட ஊராட்சி வார்டு, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வேட்பாளர்களை அதிமுக அறிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 இடங்களுக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 14 இடங்களுக்கும், ராணிப்பேட்டை 9, விழுப்புரம் 24, தென்காசி 12 இடங்களுக்கு மாவட்ட ஊராட்சி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதனிடையே அதிமுக கூட்டணியில் இருந்த பாமக வரும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்த நிலையிலும், கூட்டணியில் உள்ள பாஜக உடன் இடப் பங்கீடு முடிவடையாத சூழல் இருக்கும் நிலையில், அதிமுக தற்போது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் : பஹல்காமில் 6 நாட்களுக்கு முன்பு நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது, எடுக்கப்பட்ட புதிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.…
டெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய தினம் டெல்லியில்…
சென்னை : நேற்று முன் தினம் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சர் பொறுப்பு…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…