அமைச்சர் பெரிய கருப்பன் மரியாதை குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியதால் வெளிநடப்பு செய்துள்ளோம் என ஓபிஎஸ் பேட்டி.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை ஆளுநர் நியமித்து வரக்கூடிய சூழ்நிலையில், இதனை மாநில அரசே நியமிக்கும் சட்டமசோதா இன்று பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிப்பது தொடர்பாக சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து இந்த மசோதாவிற்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், இந்த சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
உதகையில் தமிழக ஆளுநர் ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடந்து வரும் நிலையில், சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது. கர்நாடகா மாநில சட்டத்தின்படி துணைவேந்தர்களை மாநில அரசின் இசைவுடன்தான் நியமிக்க முடியும். தெலங்கானா, கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கிறது. 1923-ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழக சட்டம் உட்பட 13 பல்கலைக்கழகங்களின் சட்டம் திருத்தப்படவுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே, பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்திருந்தது. இந்த மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக அதிமுக தெரிவித்திருந்தது. இந்த நிலையில், துணைவேந்தர்கள் நியமன மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக தெரிவித்த நிலையில், அதிமுக உறுப்பினர்களும் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இன்றைக்கு சட்டமன்ற நடவடிக்கையில் அதிமுக சார்பாக உறுப்பினர் கோவிந்தசாமி எழுந்து பேச முற்பட்ட பொழுது, அமைச்சர் பெரியகருப்பன் அவர்கள் மரியாதை குறைவாக பேசியதால், அதிமுக சார்பாக அவரை கண்டித்து பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளோம். ஆளுநர் அதிகாரத்திற்கு உட்பட்டுத்தான் செயல்பட்டு கொண்டியிருக்கிறார் என்றும் தெரிவித்தார்.
சென்னை : நெல்லை கங்கைகொண்டானில் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக இன்று முதலமைச்சர்…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
சென்னை : வழக்கமாக அஜித் படங்கள் என்றாலே அவருக்கென தனி மாஸான ஓப்பனிங் பாடல் இருக்கும். மாஸ் வசனங்களுடன் அவருடைய அறிமுக…
மகாராஷ்டிரா : இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல்…
அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பலரும்…
டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட…