அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு.
அதிமுக கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்ததை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். கடந்த 11-ஆம் தேதி பொதுக்குழுவின் போது கட்சி அலுவலகத்தில் வன்முறை நடந்ததால் வருவாய் கோட்டாட்சியர் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்தார்.
இதனிடையே, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்ட விவகாரத்தில், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டதால் சீல் வைக்கப்பட்டது எனவும் காவல்துறை தரப்பில் ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, அதிமுக தலைமை அலுவலகம் சீல் தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருதரப்பு வாதங்களும் நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்டது. இந்த நிலையில், அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்ட விவகாரத்தில் அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்,அதிமுக தலைமையகத்தில் ஒரு மாதத்திற்கு தொண்டர்களை அனுமதிக்கக்கூடாது என்றும், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு போதிய பாதுகாப்பினை காவல்துறை வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை : வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை…
டெல்லி : ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அங்கு மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 15…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு…
சீனா : ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் தினமும் பலர் உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம். அப்படி தான்…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே, வானிலை…