அதிமுக அலுவலக சாவி விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
அதிமுக அலுவலக சாவியை ஈபிஎஸ் வசம் ஒப்படைத்த உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று வந்தபோது, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், ஓபிஎஸ் எவ்வாறு உரிமை கோருகிறார் என உச்சநீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினர்.
மீண்டும் உரிமையியல் வழக்கு தொடுத்து அலுவலகத்தை மீட்க சட்ட வழிகளை நாடலாமே என்றும் தெரிவித்துள்ளனர். ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகள் சுதந்திரமாக இயங்க வேண்டும் என்றும் ஜனநாயக வழியில் அல்லாது அரசியல் கட்சி செயல்படுவதை ஏற்க முடியுமா என ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இன்னும் நான் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தான் உரிமை கோருகிறேன் என ஓபிஎஸ் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. இருப்பினும், உச்சநீதிமன்ற நீதிபதிகள் சந்திர சூட், ஹீமா கோலி அமர்வு ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…