#Breaking:அதிமுக அலுவலகத்தில் தீர்மானக் குழுவினர் முக்கிய ஆலோசனை!

Published by
Edison

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில்,அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை வெடித்துள்ளது. அந்த வகையில்,நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தியிருந்தார்.இதனைத் தொடர்ந்து,செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ்:”பிரதமர் மோடி வலியுறுத்தியதால்,முன்னதாக அதிமுக ஆட்சியில் துணை முதலமைச்சர் பதவி ஏற்றுக்கொண்டேன் என்றும் துணை முதலமைச்சர் பதவிக்கு எந்த அதிகாரமும் கிடையாது எனவும் குறிப்பிட்டிருந்தார்.இதனிடையே,சேலம் சென்றிருந்த இபிஎஸ்-யும்,அங்கு தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில்,சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுக்குழு தீர்மானக் குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.அதன்படி,செம்மலை,ஆர்பி உதயக்குமார், பொன்னையன் மற்றும் வைகைச் செல்வன் உள்ளிட்டோர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.பொதுக்குழுவில் கொண்டு வரவுள்ள தீர்மானங்கள் தொடர்பாக முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே,ஒற்றை தலைமை பேச்சால் பரபரப்பு நிலவி வரும் நிலையில்,சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 4-ஆவது நாளாக தற்போது ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.ஆரணியில் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சென்ற நிலையில், சென்னையில் உள்ள இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார்.இந்த ஆலோசனையில்,துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்,மனோஜ் பாண்டியன்,மைத்ரேயன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி! 

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…

2 hours ago

திருப்பதி கோயிலில் முட்டி போட்டு நேர்த்திக் கடன் செலுத்திய நிதிஷ் ரெட்டி!

திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…

3 hours ago

ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை கிடைக்குமா? அமைச்சர் மூர்த்தி பதில்!

மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…

4 hours ago

பொங்கல் ஸ்பெஷல் : தென்மாவட்ட மக்களுக்காக சிறப்பு ரயில்களை அறிவித்த ரயில்வே!

சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…

4 hours ago

கரும்பு சாறில் பொங்கல் செய்யலாமா?. அது எப்படிங்க.?

சென்னை :கரும்புச்சாறை   வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில்  காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…

5 hours ago

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பொங்கல் வாழ்த்து கூறிய அஜித்குமார்!

சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…

7 hours ago