#BREAKING : அதிமுக எம்எல்ஏக்கள் சாலையில் அமர்ந்து தர்ணா…! ஓபிஎஸ் உட்பட அதிமுக எம்எல்ஏக்கள் கைது…!

வாலாஜா சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்களை போலீசார் கைது செய்தனர்.
ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கும் மசோதாவை, சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தாக்கல் செய்தார். இதனையடுத்து ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை நீக்குவதற்கு சட்டப்பேரவையில் அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில், விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகம் நீக்கப்பட்டதற்கு, அதிமுகவினர் சட்டப்பேரவையில் எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதிமுக எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து, இந்த மசோதாவை கண்டித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில், ஜெயலலிதா பல்கலைக்கழகம் இணைப்புக்கு எதிராக, அதிமுக எம்ஏல்ஏக்கள் வாலாஜா சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, போலீசார் தர்ணாவில் ஈடுபட்ட ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்களை கைது செய்து வாகனத்தில் அழைத்து சென்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025