எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மாலை 6 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் 17ம் தேதி கூடும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய பல்வேறு விஷயங்கள் குறித்து எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஆலோசனை நடைபெறும் என தகவல் கூறப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற 17-ஆம் தேதி கூடுகிறது என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் இந்த கூட்டத்தொடரில் துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை நிலவி வரும் நிலையில்,ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருக்கைகள் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார். இந்த நிலையில், நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…