#BREAKING: ஜூன் 14-ம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்..!
- அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் வரும் 14-ம் தேதி நடைபெறவுள்ளது.
- அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அனுமதி கோரி டிஜிபி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு கொடுத்துள்ளார்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 14-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர், கொறடாவை தேர்ந்தெடுப்பதற்காக வரும் 14 ஆம் தேதி 12 மணிக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கூடுகிறது.
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அனுமதி கோரி டிஜிபி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு கொடுத்துள்ளார். சசிகலாவின் ஆடியோவால் சலசலப்பை ஏற்படுத்தி நிலையில் அதுபற்றி அதிமுக கூட்டத்தில் பேசப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.