#BREAKING : அதிமுக உறுப்பினர்களை வெளியேற்றவில்லை – சபாநாயகர்

அதிமுக உறுப்பினர்களை தான் வெளியேற்றவில்லை என்றும், அவர்களாக தான் வெளிநடப்பு செய்தனர் என்றும் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
நேற்று கோடநாடு விவகாரம் தொடர்பாக அதிமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சபாநாயகர் அப்பாவு தான் அதிமுகவினரை வெளியேற்றியதாக கூறப்பட்ட நிலையில், இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு அவர்கள் விளமளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அதிமுக உறுப்பினர்களை தான் வெளியேற்றவில்லை என்றும், அவர்களாக தான் வெளிநடப்பு செய்தனர் என்றும் கூறியுள்ளார். மேலும், என் அனுமதி பெறாமல், அதிமுக உறுப்பினர்கள் பதாகையை ஏந்தி கூச்சலிட்டனர். மக்கள் பிரச்சனையை பேசவேண்டிய அவையில் தனிப்பட்ட பிரச்சனையை பேச கூடாது என்று கூறியதாக சட்டப்பேரவையில் விளக்கமளித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
பவர்பிளேக்கு முன்னாடி அவுட் ஆகுறீங்க… ரோஹித் ஷர்மாவுக்கு விமர்சித்து அட்வைஸ் கொடுத்த கவாஸ்கர்!
April 8, 2025