திமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் பற்றி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. சிவி சண்முகம் எம்பி, வகைச்செல்வன், வளர்மதி, செம்மலை உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். மேலும், ஆர்பி உதயகுமார், பொன்னையன் உள்ளிட்ட தீர்மானக்குழு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
இதனிடையே, மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா போல் இனி அதிமுகவில் ஒற்றைத் தலைமை தான் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிமுகவில் சூடுபிடித்துள்ளது. ஒற்றைத் தலைமைக்கு பெருமளவில் ஆதரவு தெரிவித்ததாகவும், அந்த ஒற்றைத் தலைமை யார் என்பதை கட்சி முடிவு செய்யும் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து நேற்று கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஆகியோர் தனித்தனியே ஆலோசனை நடத்தினர்.
இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் பகுறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. வரும் 23-ம் தேதி அதிமுக-வின் பொதுக்குழு நடைபெறவிருக்கும் நிலையில், அந்தக் கூட்டத்திலேயே ஒற்றைத் தலைமையைத் தேர்தெடுக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…