அதிமுக பொதுக்குழு விதிப்படிதான் கூட்டப்பட்டது என ஈபிஎஸ் தரப்பு வாதம்.
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்குகளின் விசாரணை 2வது நாளாக இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது. நேற்று ஓபிஎஸ் தரப்பு, வைரமுத்து தரப்பு முடிந்த நிலையில், இன்று ஈபிஎஸ் தரப்பில் வாதங்கள் தொடர்கின்றன. உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது.
அதிமுகவில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது ஏன்? என்றும் பொதுக்குழு கூட்டம் கட்சி விதிப்படி நடத்தப்பட்டதா? என்பதை விளக்குமாறு நேற்று நீதிபதி ஜி.ஜெயசந்திரன் கூறியிருந்தார். நிரந்திர அவை தலைவராக கட்சி விதிப்படி தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டாரா? என்றும் கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில், இன்று இரண்டாவது னால விசாரணையில், ஈபிஎஸ் தரப்பு கூறுகையில், அதிமுக பொதுக்குழு விதிப்படிதான் கூட்டப்பட்டது. ஜூலை 11-ல் பொதுக்குழு கூட்டப்படும் என ஜூன் 23 பொதுக்குழுவிலேயே அறிவிக்கப்பட்டது. ஜூலை 11 பொதுக்குழுவுக்கான நிகழ்ச்சி நிரல் ஜூன் 27-ஆம் தேதி தயாரிக்கப்பட்டது.
ஜூன் 23 பொதுக்குழுவுக்கு நிகழ்ச்சி நிரல் ஏதும் தயாரிக்கப்படவில்லை. ஜூலை 1ல் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தலைமை கழக நிர்வாகிகள் மூலம் அழைப்பு அனுப்பப்பட்டது. ஜூன் 23 பொதுக்குழு தீர்மானங்கள் என ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்தவை வரைவு தீர்மானங்கள் தான் என நீதிபதி ஜெயசந்திரன் முன் ஈபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் வாதாடி வருகிறார்.
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…
சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…