அதிமுக பொதுக்குழுவை திட்டமிட்டபடி நடத்தலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு.
அதிமுக பொதுக்குழுவுக்கு, கட்சி விதிகளை திருத்துவதற்கு தடை கோரியும் கட்சி உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன்,சுரேன் பழனிச்சாமி தாக்கல் செய்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
ஈபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பொதுகுளுதான் கட்சியின் உச்சபட்ச அமைப்பு, பொதுக்குழுவுக்கே உள்ளது. பொதுக்குழுவில் இது நடக்கும், இது நடக்காது என உத்தரவாதம் அளிக்க முடியாது. நாளை கட்சி சட்ட விதிகளில் திருத்தம் நடக்கலாம், நடக்காமலும் இருக்கலாம். பொதுக்குழுவில் தான் உறுப்பினர்களின் விருப்பம் அறிவிக்கப்படும். பெரும்பான்மையே முடிவு செய்யும் என தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் அரவிந்த்பாண்டியன், கடந்த டிசம்பரில் உட்கட்சி தேர்தல் நடந்து ஒருமனதாக ஒருங்கிணைப்பாளர்கள் பதவி உருவாக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் ஏற்றுள்ளது. 5 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளது.
23 வரைவு தீர்மானங்களுடன் கட்சி அலுவலகத்தில் இருந்து இமெயில் வந்தது. கட்சி அலுவலகத்தில் இருந்து வந்த 23 வரைவு தீர்மானங்களுக்கு ஓபிஎஸ் ஒப்புதல் கொடுத்துள்ளார். இந்த 23 வரைவு தீர்மானங்களை தவிர வேறு எந்த அஜெண்டாவையும் அனுமதிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுவிட்டது என தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து அதிமுக பொதுக்குழுவை திட்டமிட்டபடி நடத்தலாம் என்றும், அதிமுக பொதுக்குழுவுக்கு எந்த நிபந்தனையும் இல்லை என்றும், கட்சி விதிகளை திருத்த தடையில்லை என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கட்சி விதிகளை திருத்த தடையில்லை என உயர்நீதிமன்றம் கூறியுள்ளதால் நாளை வானகரத்தில் நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தீர்மானம் கொண்டு வரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…
மும்பை : ஐபிஎல் ஏலம் என்று வந்துவிட்டது என்றால் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு தனித்துவமான அணியாக மாறிவிடும் என்றே சொல்லலாம்.…
வலிப்பு நோய் என்றால் என்ன, அதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதற்கான முதலுதவி ஆகியவை பற்றி இந்த செய்தி குறிப்பில்…
புதுச்சேரி : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…
சென்னை : நேற்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு முதலில் தவெக தலைவர் விஜய்…