அதிமுக பொதுக்குழு,செயற்குழு கூட்டமானது சென்னை வானகரம்,ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலசில் நாளை நடைபெறவுள்ளது.இதனிடையே, அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை வெடித்துள்ளது.இதனால்,இரு தரப்பினருக்கும் இடையே முரண்பாடுகள் உள்ளதால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும்,கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய கடமை காவல் துறைக்கு உள்ளது என்றும் கூறி,பொதுக்குழுவுக்கு அனுமதி தரக்கூடாது என்று கூறி ஓபிஎஸ் கையெழுத்துடன் கூடிய மனு ஆவடி காவல் ஆணையரகத்தில் நேற்று கொடுக்கப்பட்டது.
இந்நிலையில்,ஓபிஎஸ் கோரிக்கையை ஆவடி காவல்துறை நிராகரித்துள்ளது.பொது இடத்தில் நடைபெற்றால் மட்டுமே கூட்டத்திற்கு அனுமதி தரவோ,மறுக்கவோ முடியும் என்றும்,மாறாக உள் அரங்கத்தில் நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்தை தடுத்து நிறுத்த முடியாது என்று கூறி காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும்,உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றி அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு போதிய பாதுகாப்பு தரப்படும் என்றும் ஆவடி காவல்துறை தெரிவித்துள்ளது.இதனிடையே,முன்னதாக தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்,தருமம் மறுபடியும் வெல்லும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…