#Breaking:அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன்!

Published by
Edison

திமுக பிரமுகரை அரை நிர்வாணமாக்கி தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 19 ஆம் தேதி சென்னை வாக்குப்பதிவின்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவரை தாக்கி, அரை நிர்வாணமாக அழைத்து சென்றது  காரணமாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் 40 பேர் மீது கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் மார்ச் 7 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு  புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து,ஜாமீன் கோரிபல முறை அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.மேலும்,அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. நாளைய வழக்குகளுக்கான பட்டியல் தயாராகிவிட்டதால், ஜெயக்குமார் மனு வரும் வியாழக்கிழமை பட்டியலிடப்படும் என உயர்நீதிமன்றம் முன்னதாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில்,திமுக பிரமுகரை அரை நிர்வாணமாக்கி தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

திருச்சியில் தங்கியிருந்து கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் 2 வாரங்கள் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.பாதிக்கப்பட்ட திமுக பிரமுகர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் ஜெயக்குமார் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

Recent Posts

2026-ல் விஜய் ஆட்சி என்பது பகல் கனவு! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

2026-ல் விஜய் ஆட்சி என்பது பகல் கனவு! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக…

44 minutes ago

இனிமே உங்களுக்கு கிடையாது! உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்திய அமெரிக்கா!

அமெரிக்கா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராத ஒரு போராக இருந்து வருகிறது. இதன் காரணமாக…

2 hours ago

Live : சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி முதல்.., மும்மொழி கொள்கை விவகாரம் வரையில்…

சென்னை : இன்று சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி துபாயில் நடைபெறுகிறது. இதில் ரோஹித் சர்மா…

2 hours ago

2011-க்கு பிறகு..? பழிதீர்க்குமா இந்தியா? அசுர பலத்துடன் காத்திருக்கும் ஆஸ்திரேலியா!

துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதி இன்று துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல்…

3 hours ago

“சீக்கிரமா குழந்தைகள் பெத்துக்கோங்க..,” மீண்டும் ‘அதனை’ குறிப்பிட்டு பேசிய முதலமைச்சர்!

நாகை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நாகப்பட்டினத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இப்பயணத்தில் நாகை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டங்கள் தொடங்கி…

4 hours ago

அண்ணாமலை vs தங்கம் தென்னரசு! தமிழ்நாட்டின் கடன் எவ்வளவு? இந்தியாவின் கடன் எவ்வளவு?

சென்னை : தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் கடன் நிலவரம் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தமிழக பாஜக மாநிலத்…

5 hours ago