சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமை பதவிகளை ரத்து செய்யும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதே சமயம்,அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற விதி ரத்து செய்யப்பட்டு தீர்மானம் நிரவிஎற்றப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து,இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மேலும்,அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர் பதவிக்கு நான்கு மாதத்தில் தேர்தல் நடத்தவும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதனை முன்னிட்டு தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக நத்தம் விஸ்வநாதன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில்,அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் பதவியை துணை பொதுச்செயலாளர் பதவியாக மாற்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி,துணைப் பொதுச்செயலாளர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தி நிர்வாகிகளை தேர்வு செய்ய பொதுக்குழுவில் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும்,துணைப் பொதுச்செயலாளரை,பொதுச்செயலாளரே நியமனம் செய்வார் என கட்சி விதியில் திருத்தம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…