#BREAKING: ரேஷன் கடைகளுக்கு முன்பு அதிமுக பேனர் – திமுக முறையீடு
பொங்கல் பரிசு தொகை ரூ.2,500 வழங்கப்படும் நிலையில், அதிமுக சார்பில் பேனர் வைத்துள்ளதாக திமுக புகார் அளித்துள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பரிசு வழங்கப்படும் ரேஷன் கடைகள் முன்பு அதிமுக பேனர் வைக்கப்பட்டுள்ளதாக திமுக நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. அரசு தரப்புக்கு அறிவிக்கை கொடுத்து, திமுக தரப்பு வழக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ரேஷன் கடைகளுக்கு முன் ஆளுகட்சியினரின் பேனர்கள் வைத்து இடையூறு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
டோக்கன்களில் அமைச்சர்கள் படங்கள் ஆச்சிடக் கூடாது என்ற உத்தரவால் அதிமுகவினர் பேனர் வைத்துள்ளார்கள் என்று திமுக தெரிவித்துள்ளது. வழக்கு தொடர அனுமதி கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.