காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் மற்றும் எண்ணெய் வளங்களை எடுப்பதற்கான திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் நிலவளம், நிலத்தடிநீர் வளம் மற்றும் சுகாதார பாதிப்பு ஏற்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதற்கு இடையே பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முதலமைச்சர் பழனிசாமி நேற்று சட்டப்பேரவையில் அறிவித்தார். மேலும் சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதற்கான சட்டமசோதா இன்று நடக்கும் தமிழக சட்டபேரவையில் தாக்கலாகிறது என தெரிவிக்கப்பட்டது.
அந்த வகையில், இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தில், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றக்கூடிய சட்ட மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிச்சாமி, தாக்கல் செய்தார்.பின்னர் வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி : இந்திய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி (LIC) நிறுவனத்தின் இணையதள பக்க முகப்பானது ஆங்கிலத்தில் தான் செயல்பட்டு…
ரியோ டி ஜெனிரோ : பிரேசிலில் 19-வது ஜி20 உச்சி மாநாடானது நடைபெற்று வருகிறது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. திருவாரூர் உள்ளிட்ட…
டெல்லி : மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி பிறந்த தினமான இன்று (நவம்பர் 19) டெல்லியில் உள்ள…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் கட்சி ஆரம்பித்து தனது முதல் மாநில மாநாட்டை…
சென்னை : கடந்த 2 வாரங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.…