#Breaking:வேளாண் சட்ட போராட்ட வழக்குகள் வாபஸ் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடியவர்களின் மீதான அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று நடைபெற்று வரும் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.
இதனையடுத்து,மூன்று சட்டங்களும் நாட்டின் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் நலனுக்கு உகந்ததாக இல்லை. மத்திய அரசின் சட்டத்தின் மூலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பெருமளவு வருவாய் இழப்பு ஏற்படும் என்று கூறி தமிழக அரசின் தனி தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேரவையில் முன்மொழிந்துள்ளார். இதனையடுத்து,பேரவையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில்,வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடியவர்களின் மீதான அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் சட்டப் பேரவையில் அறிவித்துள்ளார்.
எம்எல்ஏக்கள் வேல்முருகன்,ஜவாஹிருல்லா ஆகியோரின் கோரிக்கையை ஏற்று முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.