#BREAKING: விளம்பர பலகை சரிந்து 3 பேர் உயிரிழப்பு..! போலீசார் விசாரணை..!
கோவை மாவட்டத்தில் விளம்பர பலகை சரிந்து 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் விளம்பர பலகை சரிந்து மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். கருமத்தம்பட்டி பகுதியில் விளம்பர பேனர் வைத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் பலத்த காற்று வீசியதாக கூறப்படுகிறது.
காற்று பலமாக வீசத்தொடங்கியதால் பேனர் கட்டிக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் இறங்கி தப்பிக்க முயன்றுள்ளனர். ஆனால், அதற்குள் இரும்பு கம்பிகள் சரிந்து விழுந்ததால் 3 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.