மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 4,308 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.
தமிழ்நாட்டில் கூடுதலாக 1,450 மருத்துவ மாணவர சேர்க்கை இந்த ஆண்டே தொடங்கப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். தமிழக சட்டபேரவையில் பேசிய அமைச்சர், ரூ.1,018.85 கோடியில் 19 மருத்துவமனைகள் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும் என்றும் 12 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ரூ.15 கோடியில் புதிய ஒருங்கிணைந்த ஆய்வகங்கள் அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 4,308 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் தெரிவித்தார். இதில் 1,021 உதவி மருத்துவர்கள், 3,287 மருத்துவம் சார்ந்த இதர பணியிடங்கள் நிரப்பப்படும் என கூறினார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் ரூ.423.64 கோடியில் ஒருங்கிணைந்த ஆய்வக சேவைகள் தொடங்கப்படும் என்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பொதுமக்களுக்கு நீரிழிவு நோய் பரிசோதனை காலை 7 மணிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் மருத்துவம் சார்ந்த பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய அமைச்சர், முழு உடல் பரிசோதனை மையம் அனைத்து மருத்துவமனைகளிலும் இருக்கும் சாதாரண விஷயம், அதற்கு போய் அம்மாவின் பெயரை அதிமுக வைத்தது. பெயர் மாற்றும் அளவிற்கு, காழ்ப்புணர்ச்சி திமுக அரசுக்கு இல்லை. சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு சென்றால் வயிறு எரிகிறது, அற்புதமான கட்டடத்தை மருத்துவமனையாக மாற்றியுள்ளனர்.
ஆட்சி அமைந்ததும், மருத்துவமனையை மாற்றிவிடுவார்கள் என்றனர். ஆனால், புற்றுநோய் ரோபோடிக் சிகிச்சை மையம் திறக்கப்பட்டது. மருந்துகள் பற்றாக்குறை என்பதே தமிழ்நாட்டில் இல்லை. முந்தைய அரசு போல் தேவையற்ற மருந்துகளை வாங்கி இருப்பு வைப்பதில்லை, தேவையானவை மட்டும் தான் வாங்குகிறோம். மேலும், தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கை 1,74,831 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…