#BREAKING : வீராங்கனை பிரியா மரணம் – முன்ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் 2 மருத்துவர்கள் மனு..!
மருத்துவர்கள் பால் ராம்சங்கர், சோமசுந்தர் முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.
இந்த நிலையில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில், பால்ராம் சங்கர், சோமசுந்தரம் ஆகிய 2 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இவர்கள் இருவர் மீதும், கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் என்ற பிரிவில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில், மருத்துவர்கள் பால் ராம்சங்கர், சோமசுந்தர் முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், பல அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம். மருத்துவக் குழு விசாரணைக்கு ஆஜராக வேண்டி உள்ளதால் முன் ஜாமின் வழங்க வேண்டும் என்றும், சாட்சிகளை கலைக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.