#BREAKING : நடிகர் விஜயின் BMW காருக்கு அபராதம் நிறுத்தி வைப்பு..!

Published by
லீனா

நடிகர் விஜய் BMW எக்ஸ் 5 காருக்கு ரூ.30 லட்சத்து 23 ஆயிரம் வணிகவரித்துறை அபராதம் விதித்த நிலையில், இதனை எதிர்த்து நடிகர் விஜய் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதில் தமிழ்நாடு வணிகவரித்துறை எந்த அடிப்படையில் இந்த அபராதம் விதித்தது உள்ளிட்ட தகவல்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு. 

நடிகர் விஜய் அவர்கள் அமெரிக்காவில் இருந்து BMW எக்ஸ் 5 என்ற காரை இறக்குமதி செய்துள்ளார். 2005-ஆம் ஆண்டு இறக்குமதி செய்த இந்த காரின் மதிப்பானது ரூ.63 லட்சமாக இருந்துள்ளது. முறையாக சுங்கவரி செலுத்தி இந்த காரை இறக்குமதி செய்த நிலையில், இந்த கார் தமிழகத்திற்குள் நுழைவதற்காக இதற்கான நுழைவு வரியை செலுத்த  உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் நுழைவு வரியை வசூலிப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என உத்தரவிட்டது. அதன்படி விஜய் தரப்பில் ரூ.7.98 லட்சம் நுழைவு வரி செலுத்தத்தப்பட்டுவிட்டது. இதற்கிடையில் நுழைவுவரி செலுத்தாமல் தாமதமான காலத்திற்காக, 400% அபராதம்  விதித்து, அதாவது ரூ.30 லட்சத்து 23 ஆயிரம் வணிகவரித்துறை அபராதம் விதித்துள்ளது.

இந்த அபராதத்தை எதிர்த்து நடிகர் விஜய் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, எந்த அடிப்படையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் உத்தரவு எப்போது பிறப்பிக்கப்பட்டது உள்ளிட்ட விவரங்களை தமிழ்நாடு வணிகவரித்துறை  தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு ஆணையிட்டுள்ள நிலையில், இந்த வழக்கை பிப்.1-ஆம்  ஒத்திவைத்து, அதுவரை நடிகர் விஜயின் BMW காருக்கு அபராதம் செலுத்த வேண்டாம் என அறிவுரை வழங்கியுள்ளனர்.

Recent Posts

ரோஹித் சர்மாவுக்கு என்னாச்சி.? நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா?

ரோஹித் சர்மாவுக்கு என்னாச்சி.? நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா?

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் போது இந்திய…

1 hour ago

யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? சும்மா வதந்தி பரப்பாதீங்க..விளக்கம் கொடுத்த மகன்!

சென்னை : பிரபல பின்னணி பாடகரான கே.ஜே.யேசுதாஸ் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிற…

2 hours ago

லோகேஷ் படத்தில் ஐட்டம் பாடல்! பூஜா ஹெக்டே வைத்து சன் பிக்சர்ஸ் போட்ட மாஸ்டர் பிளான்!

சென்னை : ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு…

3 hours ago

இந்தியால் அழிந்த இந்திய மொழிகள்., தமிழ் விழித்தது, பிழைத்தது! – மு.க.ஸ்டாலின் பதிவு!

சென்னை : தமிழ்நாடு தேசிய கல்வி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவோம் என்ற நிலைப்பாட்டுடன் இருப்பதாகவும், தேசிய கல்வி…

3 hours ago

விரைவில் அமலாகும் வக்பு வாரிய திருத்த மசோதா? மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி : வக்பு வாரியம் என்பது இஸ்லாமிய மக்களால் தானமாக வழங்கப்பட்ட சொத்துக்களை நிர்வகிக்கும் ஒரு இஸ்லாமிய அமைப்பு ஆகும்.…

3 hours ago

கே.ஜே.யேசுதாஸ் உடல்நிலைக்கு என்னவாயிற்று? மருத்துவமனையில் திடீர் சிகிச்சை!

சென்னை : எம்.ஜி.ஆர் - சிவாஜி காலத்தில் இருந்து சினிமாவில் பாட துவங்கி, தற்போது அஜித் - விஜயை தொடர்ந்து…

4 hours ago