#BREAKING : நடிகர் விஜயின் BMW காருக்கு அபராதம் நிறுத்தி வைப்பு..!

நடிகர் விஜய் BMW எக்ஸ் 5 காருக்கு ரூ.30 லட்சத்து 23 ஆயிரம் வணிகவரித்துறை அபராதம் விதித்த நிலையில், இதனை எதிர்த்து நடிகர் விஜய் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதில் தமிழ்நாடு வணிகவரித்துறை எந்த அடிப்படையில் இந்த அபராதம் விதித்தது உள்ளிட்ட தகவல்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.
நடிகர் விஜய் அவர்கள் அமெரிக்காவில் இருந்து BMW எக்ஸ் 5 என்ற காரை இறக்குமதி செய்துள்ளார். 2005-ஆம் ஆண்டு இறக்குமதி செய்த இந்த காரின் மதிப்பானது ரூ.63 லட்சமாக இருந்துள்ளது. முறையாக சுங்கவரி செலுத்தி இந்த காரை இறக்குமதி செய்த நிலையில், இந்த கார் தமிழகத்திற்குள் நுழைவதற்காக இதற்கான நுழைவு வரியை செலுத்த உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் நுழைவு வரியை வசூலிப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என உத்தரவிட்டது. அதன்படி விஜய் தரப்பில் ரூ.7.98 லட்சம் நுழைவு வரி செலுத்தத்தப்பட்டுவிட்டது. இதற்கிடையில் நுழைவுவரி செலுத்தாமல் தாமதமான காலத்திற்காக, 400% அபராதம் விதித்து, அதாவது ரூ.30 லட்சத்து 23 ஆயிரம் வணிகவரித்துறை அபராதம் விதித்துள்ளது.
இந்த அபராதத்தை எதிர்த்து நடிகர் விஜய் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, எந்த அடிப்படையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் உத்தரவு எப்போது பிறப்பிக்கப்பட்டது உள்ளிட்ட விவரங்களை தமிழ்நாடு வணிகவரித்துறை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு ஆணையிட்டுள்ள நிலையில், இந்த வழக்கை பிப்.1-ஆம் ஒத்திவைத்து, அதுவரை நடிகர் விஜயின் BMW காருக்கு அபராதம் செலுத்த வேண்டாம் என அறிவுரை வழங்கியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
சின்ன டீம் கூடதான் விக்கெட் எடுப்பார் பெரிய டீம் கூட முடியாது! ரஷித் கானை விமர்சித்த இந்திய முன்னாள் வீரர்!
February 27, 2025
சினிமாவில் நடிச்சி சொத்து சேத்து வச்சிட்டு அரசியல் வராங்க! சிக தலைவர் திருமாவளவன் பேச்சு!
February 27, 2025
காலத்தால் அழியாத காதல் …15 ஆண்டுகளை கடந்த VTV…நடிகர் சிம்பு நெகிழ்ச்சி!
February 27, 2025