#BREAKING: முதல் நாளிலேயே அதிரடி., பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் தமிழிசை உத்தரவு.!

புதுச்சேரியில் பெருபான்மையை நிரூபிக்க முதல்வர் நாராயணசாமிக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார்.
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு பிப்.22-ஆம் தேதி பெருபான்மையை நிரூபிக்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆளுநர் தமிழிசையை எதிர்க்கட்சி தலைவர் சந்தித்து வலியுறுத்தி வந்த நிலையில், துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்ற முதல் நாளிலேயே அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் தொடர்ந்து பதவி ராஜினாமா செய்ததால், தற்போது காங்கிரஸ் கூட்டணி சட்டசபையில் 14 ஆக உள்ளது. எதிர்க்கட்சி தரப்பிலும் 14 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இரு அணிகளுக்கு சமபலம் உள்ள நிலையில், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.