#BREAKING : முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்துகுவிப்பு வழக்குப்பதிவு..!
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள், வருமானத்துக்கு அதிகமாக சொத்து வாங்கி குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதிமுக-வின் முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், போக்குவரத்து கழகங்களில் ஏற்பட்ட இழப்பீடு, ஊழல் தொடர்பாக எழுந்த புகார்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள், வருமானத்துக்கு அதிகமாக சொத்து வாங்கி குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து, 21 டிஎஸ்பி-க்கள் தலைமையில், சென்னை, கரூர் உள்ளிட்ட 21 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.