#BREAKING : ஐஏஎஸ் பணி விதி திருத்தத்தை கைவிடுக – பிரதமருக்கு முதல்வர் கடிதம்..!
இந்திய ஆட்சிப்பணி விதிகளில் திருத்தம் செய்யும் மத்திய அரசின் இந்த முடிவினை கைவிட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்திய ஆட்சிப்பணி விதிகளில் திருத்தம் செய்யும் மத்திய அரசின் முடிவிற்கு, தமிழக அரசியல் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், மத்திய அரசின் இந்த முடிவினை கைவிட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், சமீபத்தில் ஒன்றிய அரசு அகில இந்திய ஆட்சிப் பணி விதிகள் 1954ல் உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் இந்திய கூட்டாட்சித் செய்ய தத்துவத்திற்கும், மாநில சுயாட்சிக்கும் எதிரானது என்றும் இந்த உத்தேச திருத்தங்களுக்கு தன்னுடைய கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து கொள்வதாகவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
#CMMKSTALIN | #TNDIPR |@PMOIndia @narendramodi @CMOTamilnadu @mkstalin @mp_saminathan
2/2 pic.twitter.com/LeK9BUUuRv— TN DIPR (@TNDIPRNEWS) January 23, 2022