வங்கக் கடலில் புயல் உருவாகும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், டிசம்பர் 8-ஆ தேதி அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை.
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்றும் அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
குறைந்த காற்றழுத்தல் தாழ்வு பகுதி காரணமாக தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு பெய்யக்கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் 7-ஆம் தேதி முதல் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யும் என்றும் டிசம்பர் 8-ஆம் தேதி தமிழகத்தில் அதி கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் சென்னை உள்பட 13 மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 8-ஆம் தேதி கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…
சென்னை: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார்.…
மதுரை : பெண் காவலர்கள் பற்றி அவதூறாக பேசியதாக யூ-டியூபர் சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் கோவை போலீசார்…