நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.குறிப்பாக,மகாராஷ்டிரா,கேரளா,டெல்லி ஆகிய மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க தீவிர கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை தேவை என மாவட்ட ஆட்சியாளர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார்.
இதனையடுத்து,தற்போது சென்னை,செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது எனவும்,இதனால் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் கூறி மாவட்ட நிர்வாகங்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று கடிதம் எழுதியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து,தமிழகத்தில் பெரும்பாலும் 99% பேருக்கு BA2 வகை வைரஸ் தான் பரவுகிறது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:”ஒமிக்ரான் வகை தொற்றைப் பொறுத்த வரையில் 7 வகை உள்ளது.அதன்படி, BA1,BA2,BA3,BA4,XE உள்ளிட்ட ஏழு வகையிலான தொற்று உள்ளது.அந்த வகையில்,தற்போது தமிழகத்தில் பெரும்பாலும் 99% பேருக்கு BA2 வைரஸ் தான் உள்ளது.இது A வகை தான்.எனினும் மக்கள் அச்சப்பட தேவையில்லை”என்றும் கூறியிருந்தார்
இந்நிலையில்,தமிழகத்தில் புதிய வகை கொரோனா பரவுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக,சென்னையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில்:
“தமிழகத்தில் புதிய வகை கொரோனா பரவ தொடங்கியுள்ளது.அதன்படி, 15 நாட்களுக்கு முன்னர் கண்டறியப்பட்ட புதிய வகையான BA4 வகை கொரோனா 4 பேருக்கும்,BA5 வகை கொரோனா 8 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து,உருமாறிய ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 12 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.அவர்கள் நலமாக உள்ளனர்.இதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை “,என்று கூறியுள்ளார்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…