#breaking: 9,10,11ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் – சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு.!

9,10,11-ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் தனபால் வாசித்தார். இதன்பின் இடைகால நிதி நிலை அறிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, 9,10,11-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுயின்றி தேர்ச்சி பெறுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். 9,10,11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பை விதி எண் 110ன் கீழ் தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு மாணவர்கள் பொதுதேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக முதல்வர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025