#BREAKING: 9 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் அதிரடியாக 9 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, காவலர் பயிற்சி துறையில் இருந்த ஷகில் அக்தர், சிபிசிஐடிக்கு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிறப்பு நிர்வாக டிஜிபியாக இருந்த கந்தசாமி, ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு டிஜிபியாக பணியிட மாற்றம்.
சிறப்பு அதிரடிப்படை ஏடிஜிபி ரவி, சென்னை காவல்துறை நிர்வாக டிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உளவுத்துறை ஐஜி ஈஸ்வர மூர்த்தி, சென்னை உளவுத்துறை பிரிவு ஐஜியாகவும், காவல்துறை தொழில்நுட்ப பிரிவு டிஜிபி ஆசியம்மாள், உளவுத்துறை டிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், எஸ்பிசிஐடியாக சென்னை பணியிட மாற்றம். தூத்துக்குடி காவலர் பயிற்சி பள்ளி எஸ்பி சரவணன், குற்றப்பிரிவு உளவுத்துறை எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்பு பிரிவு சிஐடி-I எஸ்பி திருநாவுக்கரசு மற்றும் பாதுகாப்புப்பிரிவு சிஐடி-II எஸ்பி சாமிநாதன் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.